பும்தாங் மாவட்டம்
Appearance
பும்தாங் மாவட்டம்
བུམ་ཐང་རྫོང་ཁག (திஃசொங்கா மொழி) | |
---|---|
பூட்டானில் பும்தாங் மாவட்டத்தின் வரைபடம் | |
நாடு | பூட்டான் |
தலைமையகம் | ஜாகர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,717 km2 (1,049 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 17,820 |
• அடர்த்தி | 6.6/km2 (17/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (BTT) |
ம. மே. சு. (2019) | 0.661[1] மத்திமம் · 6வது |
இணையதளம் | www |
பும்தாங் மாவட்டம் (Bumthang District) பூட்டானிலுள்ள 20 மாவட்டங்களில் ஒன்றாகும். இங்கு வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் பல அமைந்துள்ளன. இங்கு 4 பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளன. அவை உரா, சும்மி, டாங், சோய்கார் ஆகியன. இம்மாநிலம் ஒட்டுமொத்தமாக பும்தாங் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படும். பும்தாங் எனில் அழகான நிலம் என்று பொருள்.
பொருளாதாரம்
[தொகு]இங்கே கேழ்வரகு, பால் பொருட்கள், தேன், ஆப்பிள், உருளைக்கிழங்கு, கம்பிளி போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. பொருளாதாரத்தில் கேழ்வரகு முக்கியப் பங்கு வகிக்கிறது.
மொழிகள்
[தொகு]பும்தாங்கா, ட்ஸோங்கா, கென்ங், கென்ங்கா, குர்டோப்கா, நுப்பிக்கா, ப்ரோக்காட், துர் மற்றும் யாக்கெர்ட் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.
ஜிவோக்கள்
[தொகு]கிராமங்களின் தொகுப்பு ஜிவோக்கள்[2] என அழைக்கப்படும். பும்தாங் 4 ஜிவோக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
- சும்மே
- சோய்கோர்
- டாங்
- உரா
நகரங்கள்
[தொகு]- சும்மே
- ஜாகர்
- உரா
- டாங்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
- ↑ "Chiwogs in Chukha" (PDF). Election Commission, Government of Bhutan. 2011. Archived (PDF) from the original on 2011-10-02. பார்க்கப்பட்ட நாள் 2011-07-28.